» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. கிளை செயலாளர் குத்திக்கொலை: விருதுநகரில் பயங்கரம்

வியாழன் 18, ஏப்ரல் 2024 11:27:18 AM (IST)

விருதுநகரில் தி.மு.க. கிளை செயலாளர் மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் தவிட்டுராஜ் (60). தி.மு.க. கிளை செயலாளராகவும், நிலத்தரகராகவும் இருந்தார். இவர் சிவகாசி செல்லும் மெயின் ரோடு மண்குண்டாம்பட்டி டீக்கடையில் நேற்று பகல் 11 மணிக்கு டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. இதைப்பார்த்து அவர் சுதாரித்து தப்புவதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சுற்றி வளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தவிட்டுராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தவிட்டுராஜ் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தவிட்டுராஜை எதற்காக கொலை செய்தனர்? முன்பகையா அல்லது வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் தலைமையில் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory