» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு மையங்களை ஆட்சியர் ஆய்வு

சனி 13, ஏப்ரல் 2024 10:45:03 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்ற அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில், வெளி மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் 13.04.2024 மற்றும் 14.04.2024 ஆகிய தேதிகளில் 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆசாரிபள்ளம், நாகர்கோவிலிலும், 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, யு.சு. கேம்ப் ரோடு, நாகர்கோவிலிலும்,

231, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித சேவியர் பொறியியல் கல்லூரி சுங்கான்கடையிலும், 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் எக்ஸல் சென்ட்ரல் பள்ளி, திருவட்டாரிலும், 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி பம்மம், மார்த்தாண்டத்திலும், 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கலிலும் தங்களது வாக்கினை செலுத்தலாம்.

மேலும் பிற மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆசாரிபள்ளம், நாகர்கோவிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வசதி மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தலாம். இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அவரகள் தெரிவித்தார்கள்.

முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில், வெளி மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர்கள் செந்தில் வேல் முருகன் (விளவங்கோடு), சாந்தி (கன்னியாகுமரி), வட்டாட்சியர்கள் குமாரவேல் (விளவங்கோடு), கோலப்பன் (தோவாளை) அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory