» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:24:16 PM (IST)

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) மாணவர் சேர்க்கைக்கு வருகிற 22-ஆம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 25 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுபான்மையற்ற தனியாா், சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி, முதல் வகுப்பு) பள்ளிவாரியாக உள்ள மொத்த இடங்கள், அவற்றில் 25 சதவிகித இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலா்களின் தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின்  (rte.tnschools.gov.in) RTE மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இம்மாதம் 22-ஆம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மே 20-ஆம் தேதியுடன் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நிறைவுபெறுகிறது என்று தனியார் பள்ளி இயக்குனர் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகுதி பெற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விவரம் அந்தந்த பள்ளி தகவல் பலகைகள் மற்றும் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.


மக்கள் கருத்து

Neelagandan GApr 5, 2024 - 07:05:51 PM | Posted IP 172.7*****

Mellanattur area which school available for RTE pin code 62002

G.siva sakthiApr 3, 2024 - 06:23:04 PM | Posted IP 162.1*****

Ggjjvc

Merunika sriApr 2, 2024 - 06:24:15 PM | Posted IP 172.7*****

In kunnathur what are the schools with RTE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory