» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விருதுநகரில் ராதிகா, தென்காசியில் பி. ஜான் பாண்டியன் போட்டி: பாஜக 2வது வேட்பாளர் பட்டியல்!!

வெள்ளி 22, மார்ச் 2024 4:35:25 PM (IST)



பாஜகவின் 2வது வேட்பாளர் பட்டியலில் விருதுநகரில் ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) தொகுதியில் பி. ஜான் பாண்டியன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பட்டியலில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன். வி. பாலகணபதி, வட சென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வதாமன், நாமக்கல்லில் கே.பி. ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சியில் கே. வசந்தராஜன், கரூரில் வி.வி. செந்தில்நாதன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் எஸ்ஜிஎ ரமேஷ், தஞ்சையில் எம். முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் பி. ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், கோவையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் களமிறங்குகின்றனா். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளா்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனா். தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory