» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி: பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

வெள்ளி 22, மார்ச் 2024 10:28:19 AM (IST)

பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டிடுகிறார். திண்டுக்கல் ம.திலகபாமா, அரக்கோணம் கே.பாலு, ஆரணி அ.கணேஷ் குமார், மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.கள்ளக்குறிச்சியில் ரா. தேவதாஸ், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் ந. அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டிடுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory