» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயதரணி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்: காங்கிரஸில் இருந்து நீக்கம்!

சனி 24, பிப்ரவரி 2024 3:30:15 PM (IST)கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். 

கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ, 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த விஜயதரணி, கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வந்தன. இந்தச் சூழலில் அவர் இன்று பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், "விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்தார்.

அண்ணாமலை வரவேற்பு: 

"காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவின் இணைந்துள்ளார். அவரை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸில் இருந்து விஜயதாரணி நீக்கம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். கட்சி தாவியதை தொடர்ந்து, அவரை காங்கிரஸில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தலில் சீட் கொடுக்கததால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணியிடம் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பலமுறை பேசியும் தீர்வு எட்டப்படவில்லை; அவர் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்துள்ளார்.

விஜய்வசந்த் எம்பி கண்டனம்

விஜயதரணி மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த  விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று விஜய்வசந்த் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

கந்தசாமிFeb 24, 2024 - 04:22:59 PM | Posted IP 172.7*****

ஒரு ஈனப்பிறவி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory