» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
துணிந்து நின்றும் பணி செய்த பெண் ஆளுமை: ஆளுநர் தமிழிசை புகழஞ்சலி!
சனி 24, பிப்ரவரி 2024 12:24:01 PM (IST)
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என நிரூபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று (பிப். 24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில், "பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று...அவர் என்மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்...இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
MakkalFeb 24, 2024 - 04:30:22 PM | Posted IP 172.7*****