» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்: ஜெ. பிறந்த நாளில் இபிஎஸ் உறுதி!
சனி 24, பிப்ரவரி 2024 11:39:38 AM (IST)

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று.
ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா. தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக "உங்களால் நான், உங்களுக்காகவே நான்" என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா.
அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம். எனதருமைக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று, அந்த வெற்றியை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு வெற்றி மாலைகளாக, அவர்கள் நீடு துயில் கொள்ளும் நினைவிடங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
நம்மையெல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மாவின் பிறந்த நாளில், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று (பிப். 24) தமிழக முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:08:09 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:31:40 PM (IST)

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:22:19 AM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)
