» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிகாரப்பூர்வ தகவல்களே உண்மையானவை : தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:35:14 PM (IST)
விஷமத்தனமாக பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
யூகத்தின் அடிப்படையில் விஷமத்தனமாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகும் தகவல்களே உண்மையானவை என்றும் அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.