» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கு: குமரியில் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:24:53 PM (IST)சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குமரியில் உள்ள சார் பதிவாளர் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்..

திருநெல்வேலி மாவட்டம் வி. கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பு அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  அந்த வழக்கின் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு குமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ளது. அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஒரே நேரத்தில் இங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. 

சோதனையில் ஏராளமான வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory