» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தடம்புரண்ட சரக்கு ரயில் மீட்பு பணிகள் நிறைவு : ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:24:19 PM (IST)
தடம்புரண்ட சரக்கு ரயில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், நேற்று இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் தண்டவாளத்தை சீரமைத்து ரயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவை சீராகியுள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) மாலை மீண்டும் தொடங்கியுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










