» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்!
திங்கள் 11, டிசம்பர் 2023 3:44:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.12.2023) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 474 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பறக்கின்கால் பகுதியில் செயல்பட்டு வரும் சத்தியா அம்மையார் அரசு நினைவு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளிடையேயான ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 2 குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், சமூக பொறுப்பு, கல்வி, மனிதநேயம் மற்றும் இதர செயல்பாடுகளில் சிறந்து விளக்கிய 3 குழந்தைகளுக்கு CHILD LEADER AWARD-களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குழந்தை சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரயாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், மாவட்ட குழந்தைகள் அலுவலக (பொறுப்பு) பியூலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










