» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு அமைச்சா் பொன்முடியிடம் அமலாக்கத் துறை விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 3:38:12 PM (IST)
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட புதிய வழக்கு விசாரணைக்கு தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, நவ.30-ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று காலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நீடித்தது. அமைச்சா் க.பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகள் தனது மகன், உறவினா், பினாமி ஆகியோா் பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தினாா்.
செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28,36,40,600 இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி, உறவினா் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
இதைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடா்பாக அவரிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர்.
செம்மண் முறைகேடு மூலம் ஈட்டிய பணத்தை ஹவாலா பரிவா்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட ரூ. 81,70,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ. 41.90 கோடி வங்கி நிரந்தர வைப்புத் தொகை முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த ஆக.23-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 90 பக்கக் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










