» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 5:24:05 PM (IST)
தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை கடந்த சில நாள்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை இன்று(நவ. 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










