» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிவாரண நிதி வழங்கல்!
புதன் 29, நவம்பர் 2023 4:40:32 PM (IST)

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் ரூ.4 இலட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பள்ளிக்கூடத் தெருவைச் சார்ந்த சபரிராஜா (23) என்பவர் கடந்த 6.11.2023 அன்று கல்குளம் வட்டம் மணவாளக்குறிச்சி கிராமம் பெரியகுளம் ஏலா பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக நெல் அறுவடை மேற்கொண்ட நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக அருகாமையில் உள்ள விவசாய சங்ககட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற சபரிராஜா மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி காலமானார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறந்தவரின் வாரிசுதாரரான அவரது மனைவிக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரணயன் உடன் இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










