» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!
புதன் 29, நவம்பர் 2023 11:30:33 AM (IST)
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் கடந்த மார்ச் மாதம் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தொடர் தற்கொலை சம்பவத்துக்கும், ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை விவகாரத்துக்கும் நீதி கேட்டு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழுவில் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் சபிதா, கன்னேகி பாக்கியநாதன், பேராசிரியர் ரவீந்திர கெட்டு, மாணவர் அமல் மனோகரன் ஆகியோர் இடம்பெற்றனர்.
விசாரணை அறிக்கை கல்வி நிறுவனத்தின் நிர்வாகக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










