» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
புதன் 29, நவம்பர் 2023 10:50:26 AM (IST)

வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று தொடங்கப்பட்டு உள்ளது. சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்.
நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சுற்றுலாத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் கமல் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










