» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:52:56 PM (IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் என்றும் கூறி கே.கே. ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.