» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:42:33 PM (IST)
ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்டப்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சகி என்ற சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையமானது கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10.11.2020 முதல் தலைமை அலுவலகமானது 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது.
ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் இரண்டு பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் கீழ்கண்ட தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் Case Worker பணியிடங்களின் எண்ணிக்கை - 2. கல்வித் தகுதி BA/MA Sociology, BSW / MSW (Female). பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளம், கன்னியாகுமரி மாவட்டம்-629001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் 05.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










