» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காடு வளர்ப்பு திட்ட மேலாண்மை கூட்டம்: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:55:49 PM (IST)

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர்,கன்னியாகுமரி வனக்கோட்டம், சார் ஆட்சியர், பத்மநாபபுரம், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர்கள், ஆதி திராவிடர் நலத்துறை உதவி இயக்குநர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பழங்குடியின கிராம வனக்குழு தலைவர்கள் மற்றும் வனக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பழங்குடியின கிராம மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருதல், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல், மின் இணைப்பு ஏற்படுத்தி தருதல், சமுதாய கூடம் அமைத்து கொடுத்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்க கோரிக்கைகளை வனக்குழுக்கள் மூலம் தீர்மானம் இயற்றி கூட்டு வன மேலாண்மை கூட்டத்தில் சமர்ப்பித்தனர். இப்பொருள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியன், பத்நாபபுரம் சார் ஆட்சியார் எச்.ஆர்.கௌசிக், உதவி வன பாதுகாவலர் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










