» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் வி.பி.சிங் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 27, நவம்பர் 2023 11:36:36 AM (IST)

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினா் மற்றும் தமிழக அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனர். சிலையை திறந்து வைத்த பிறகு, அமைச்சர் உள்ளிட்ட அனைவருடனும் வி.பி. சிங் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து வி.பி. சிங் குடும்பத்தினர் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமராக இருந்தபோது தமிழக மக்களின் வாழ்வதாரப் பிரச்னையான காவிரி நதிநீா் பிரச்னைக்கு தீா்ப்பாயத்தை அமைத்து தந்தாா் வி.பி. சிங்.
சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜா் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினாா். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










