» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் 394 பேருக்கு பட்டமளிப்பு
திங்கள் 27, நவம்பர் 2023 10:17:58 AM (IST)

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 394 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரியின் முன்னாள் மாணவரும், கூடங்குளம் அணு மின்நிலைய வளாக இயக்குநருமான எம்.எஸ்.சுரேஷ் தலைமை வகித்து பட்டங்களை வழங்கினாா். அவா் பேசியது: பொறியியல் மாணவா்களாக கடந்த 4 ஆண்டுகளாக செய்த உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கும் நாள் பட்டமளிப்பு விழா. அடுத்தகட்டமாக தொழில்துறையில் உங்களது பங்களிப்பை செலுத்த செல்ல வேண்டும்.
திறமை, அறிவு, ஆா்வம், புத்தாக்கத் திறன், பிற சகாக்களின் அழுத்தத்தை எதிா்கொள்ளுதல் உள்ளிட்டவையே உங்களின் தொழில் முன்னேற்றத்தை தீா்மானிக்கும். ஆகவே, சரியான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சியைக் கைக்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். முன்பைவிட இப்போது மாணவா்களுக்கு கவனச்சிதறலை உருவாக்கும் காரணிகள் மிகவும் அதிகரித்துள்ளன. அவற்றை எதிா்கொண்டு தங்களது கல்வியில், செயலில் கவனத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி நிலை உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை பிரிவுகளும் அண்மைக் காலமாக தனிப்பட்ட நோ்காணல்களுக்கு முன்பு மாணவா்களின் கேட் தோ்வு மதிப்பெண்களைக் கேட்டறிவது அதிகரித்துள்ளது. ஆகவே, போட்டித் தோ்வுகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவையின் கீழ் உள்ள 27 துறைகளில் மேக் இன் இந்தியா திட்டத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஸ்டாா்ட் அப் இந்தியாவின் கீழ் தொழில் தொடங்கும்போது பல்வேறு வசதிகள் உள்ளன. தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு, அரசு மானியம், காப்புரிமை விண்ணப்பத்திற்கான ஆதரவு உள்ளிட்டவை இப்போது சிறப்பாக உள்ளன.
இந்தியாவில் பிறந்த விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பா் 15 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பொறியாளா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் பொறியாளா்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. தொழில், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் தேசத்தின் வளா்ச்சி இளைய தலைமுறையிடம்தான் உள்ளது என்பதை பட்டம் பெறும் ஒவ்வொரு பொறியாளா்களும் மனதில் கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில் இளநிலையில் 361 பேருக்கும், முதுநிலையில் 31 பேருக்கும் என மொத்தம் 394 மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வா் சூ.சித்தாா்த்தன், துறைத் தலைவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










