» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த பெண் கைது!
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:33:03 AM (IST)
அஞ்சுகிராமத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சிவபாண்டியன் மனைவி பொன்மணி (68). இவர் தனது மருமகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொன்மணி தனது மருமகளுடன் திருச்செந்தூரில் உள்ள உறவினர் திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் அவர்கள் திருச்செந்தூரில் இருந்து பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர்.
அந்த பஸ் அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் வந்த போது பொன்மணி இறங்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை காணாமல் சத்தம் போட்டார். இதனால் பஸ் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் பஸ்சில் இருந்து இறங்கி வேகமாக தப்பி செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை அஞ்சுகிராமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மானாமதுரை சிப்காட் சர்க்கோஸ் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி காளியம்மாள் (27) என்பதும், பொன்மணியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காளியம்மாளை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










