» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை : காதல் ஜோடி உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:31:09 AM (IST)
கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த காதல் ஜோடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கண்ணூர் டவுண் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போதைப்பொருள் கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும் அங்குள்ள கல்வி நிலையங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஒரு விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த வாலிபரையும், இளம்பெண்ணையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கண்ணூர் புதிய தெரு பகுதியை சேர்ந்த யாசிர் (வயது 26) மற்றும் அவரது காதலி அபர்ணா (23) என்பதும், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது 154 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில், இவர்களது கூட்டாளிகளான 2 பேர் வேறு ஒரு விடுதியில் போதைப்பொருளுடன் தங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ரிஸ்வான், தில்ஷித் ஆகிய இருவரையும் கைது செய்த னர் அவர்களிடமிருந்து 112 கிராம் ஹாசிஷ் ஆயிலை கைப்பற்றினர்.
இந்த கும்பல் பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை வாங்கி கண்ணூரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். விசாரணைக்குப்பின் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










