» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம்: 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் பணியிட மாற்றம்!
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:29:12 AM (IST)
சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த புகாரில் சிக்கிய 9 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இதர போலீசார் 36 பேர்கள் என மொத்தம் 65 பேர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. சென்னை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்களில் 3 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படுவதற்காக டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களில் 7 சப்-இன்ஸ்பெக்டர்களும் 16 போலீசாரும் நேற்று வெளிமாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். மீதி உள்ளவர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இதற்கிடையில் புகாரில் சிக்கிய சென்னை உளவுப்பிரிவில் பணியாற்றிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 போலீசாரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதே புகாரில் சிக்கிய 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் நேற்று சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் மூவரும் வட சென்னை கூடுதல் கமிஷனர் சரகத்தில் பணியாற்றியவர்கள். டி.ஜி.பி. சங்கர்ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










