» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்
சனி 25, நவம்பர் 2023 12:32:30 PM (IST)

நாகர்கோவிலில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாமினை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (25.11.2023) நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து தெரிவிக்கையில் -
தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாட அறிவுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட ஆலோசிக்கப்பட்டு இன்று நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் இரத்த அழுத்தம், கண் பரிசோதனை, தொழுநோய், காசநோய், டெங்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய மருந்து, மாத்திரிகைள் வழங்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுபுறங்களையும் தூய்மையாக பேணி, சுகாதாரமாக வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நடைபெற்ற முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மீனாட்சி, மாநகர் நல அலுவலர் ராம்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










