» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் பரவல் தீவிரம்: முக கவசம் அணிவது அவசியம்!

சனி 25, நவம்பர் 2023 12:02:21 PM (IST)

தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதில், 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.

இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல்வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல், மருத்துமவனையில் சிகிச்சை பெற வேண்டும்.

டாக்டர்கள் நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ தேவையில்லை. அவர்கள் தனிமையில் ஓய்வெடுத்தல் போதுமானது.

அதேநேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு, 'ஓசல்டாமிவிர்' என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அதேபோல், தீவிர பாதிப்புக்குள்ளானவர்களை, அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

'ஓசல்டாமிவிர்' மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம். மருத்துவத் துறையினர், சுகாதார கள பணியாளர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்களும் முக கவசம் அணிவது அவசியம்.இவ்வாறு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory