» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
சனி 25, நவம்பர் 2023 10:58:02 AM (IST)

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடக்கிறது.
அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.
டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும இறைமக்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










