» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 24, நவம்பர் 2023 3:54:56 PM (IST)

பெருமாள்புரம் மற்றும் பழவிளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 152 வீடுகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்புரம் மற்றும் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழவிளை ஆகிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று(24.11.2023) புதிய வீடுகள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, தெரிவித்தாவது; தழிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்ஒருபகுதியாக, சட்டப் பேரவையில், பேரவை விதி எண் 110-ன் கீழ் இலங்கைத் வாழ் தமிழர்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையினை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் 7,469 வீடுகளில் முதற்கட்டமாக 3,510 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 3,959 புதிய வீடுகளும் கட்டித்தரப்படும் என அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்புரத்தில் அமைக்கப்பெற்றுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 80 வீடுகள் ரூ.4.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. மேலும் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழவிளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 72 வீடுகள் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. புதிய வீடுகள் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்ற பின் உரிய பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து குடியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், வட்டார வளரச்சி அலுவலர்கள் புஸ்பரதி(வ.ஊ), சேகர்(கி.ஊ) , உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) சி.ரெஜன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் த.பிரேம லதா, அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழு தலைவர் தாமரைபாரதி, வட்டார மருத்துவ குழு உறுப்பினர் பாபு, பார்த்தசாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










