» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
வெள்ளி 24, நவம்பர் 2023 3:31:54 PM (IST)
ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் ‘சட்டப்பேரவைகளின் சட்டமியற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநரின் அதிகாரம் பயன்படுத்தப்படக்கூடாது’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 'ஆளுநர் பதவி என்பது ஒரு அடையாளப் பதவிதானே தவிர, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை அவர் நிறுத்திவைக்க முடியாது' என்று கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
'ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, அது அவசியம் என நினைத்தால், திறமையான மூத்த வழக்கறிஞரை அழைத்து தீர்ப்பை விளக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின், 'மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது - மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










