» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள் நடத்த பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 24, நவம்பர் 2023 12:32:17 PM (IST)
குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரிகள் டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 26.01.2024 அன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளில் பராம்பரிய கலைகள், கலாச்சரம் மற்றும் பண்பாடு, அறிவியல் வளர்ச்சி, பல்துறை முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 நபர்கள் ஒரு குழுவில் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சி 7 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்யப்படும் இசைத்தொகுப்பு/பாடல், கருப்பொருள் Concept உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 7, 2023-க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










