» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி : வாலிபர் கைது!
வியாழன் 23, நவம்பர் 2023 5:45:12 PM (IST)
கொல்லங்கோடு அருகே கத்தியைக் காட்டி மிரட்டி காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கேரள மாநிலம் பொழிவூர் பருத்தியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது அவரை வாலிபர் வின்சென் (24).என்பவர் பார்த்து ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் வின்சென் தனது காதலை மாணவியிடம் கூறினாராம். இதனை மாணவி வீட்டில் கூறியுள்ளார். வீட்டினர் கடந்த 6 மாதம் முன் வின்செனை கண்டித்தார்கள். கடந்த மாதம் 10 ம் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும்போது வின்சென் மீண்டும் மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 'நீ என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன்' என மிரட்டினராம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாலை வீடு வந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.வீட்டினர் மாணவியை மீட்டு பாறசாலையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்தால் பயந்து போன மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வின்சென் மீது போக்சோ மற்றும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










