» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இரட்டை பாதை பணிக்காக அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் மூடல்: வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 23, நவம்பர் 2023 11:10:58 AM (IST)
இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. கேரளாவில் 38 சதவீத மும், தமிழ்நாட்டில் 14 சதவீதம் நில ஆர்ஜிதம் முடிந்துள்ளது. இந்த இரட்டை ரயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக 21-ந் தேதி மாலை. 4.30 மணி அடைக்ககப்பட்டது இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப்பட்டு இருக்கும். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்வேகேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.
இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழி யாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக கன்னியாகுமரி மற்றும் கல்லூரி, பள்ளி களுக்கு செல்லும் வாக னங்கள், இருசக்கர வாக னங்கள் மாற்று வழியாக. அகஸ்தீஸ்வரம், மாடு கட்டிவிளை சரவணன் தேரி, சுக்குப்பாறைதேரிவிளை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்களும், கன்னியா குமரிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி குள்ளாகியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










