» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:47:23 PM (IST)

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக தலைமை கடந்த மாதம் அறிவித்தது. மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடனிருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு முதல்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital







Thoothukudi Business Directory