» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைகை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்

ஞாயிறு 1, அக்டோபர் 2023 8:01:40 PM (IST)

வைகை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை-சென்னை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலால் பல்வேறு ரயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதைதொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தடையும்.

மதுரை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(வ.எண்.16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.00 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12638) மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படும். மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 3.35 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது மின்சார என்ஜினும், மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் போது டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டு இயக்கப்படும்.

இதற்கிடையே மதுரை-செங்கோட்டை இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று முதல் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, இந்த ரயில் மதுரையில் இருந்து இரவு 9.55 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory