» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெற்கட்டும் செவலுக்குச் சென்று பூலித்தேவர், பச்சேரி வெண்ணி காலடி, ஒண்டி வீரன் ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதல் நாளான நேற்று குற்றாலத்தில் விவசாயிகளுடன் பங்கேற்ற நிகழ்ச்சி, ஆழ்வார்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தியாளர்களுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி இரவு கோவிந்தப்பேரி ஷோகோ கிராமத்தில் தங்கினார்.
இரண்டாம் நாளான இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோவிந்தப்பேரியில் இருந்து புறப்பட்டு வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்திற்குச் சென்றார். அங்கு மன்னர் பூலித்தேவர் அரண்மனையில் உள்ள மன்னர் பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அருகில் உள்ள பச்சேரி கிராமத்திற்கு ஆளுநர் சென்றார். அங்குள்ள உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, ஒண்டிவீரன் ஆகியோர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கலந்து கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










