» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)
திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணியை அதிமுக நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.பாஜக உடனான மோதல் உச்சத்தை எட்டிய நிலையில்தான் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என அவர் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சி.டி.ரவி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










