» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவுடன் இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை: கே.பி.முனுசாமி திட்டவட்டம்
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:34:34 PM (IST)
பாஜக தேசியத் தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. நேரம் வரும்போது பாஜக கூட்டணியில் அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல்.பாஜக தேசியத் தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை. அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்கள் என்ற அச்சத்திலேயே திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்' என்று பேசினார்,
மக்கள் கருத்து
கந்தசாமிSep 28, 2023 - 01:03:47 PM | Posted IP 172.7*****
நீயே ஒரு டம்மி பீஸ் உன் பேச்சு ஒரு டுபாக்கூர் நீ சொல்லி ஏதும் உருப்படியாக நடந்துள்ளதா போய்யா
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











JAY JAY JAYSep 28, 2023 - 03:30:43 PM | Posted IP 172.7*****