» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சனி 3, ஜூன் 2023 11:16:24 AM (IST)

சேவை குறைபாட்டின் காரணமாக செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி விளையைச் சார்ந்த மலர் எடிசன் என்பவர் நாகர்கோவிலுள்ள மொபைல் கடையில் ரூ.9,950 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்திலேயே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து பழுது நீக்கப்பட்டுள்ள மொபைலை வாங்கிச் செல்லுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். ஆனால் நுகர்வோர் தான் வாங்கிய மொபைலில் உற்பத்தி குறைபாடு உள்ளதால் வேறு புதிய மொபைல் வேண்டுமென வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் வேறு புதிய மொபைல் கொடுக்க வாய்ப்பில்லை என கடைக்காரர் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் மொபைல் கடையின்; சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.9,950 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory