» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலையில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்!

சனி 27, மே 2023 8:48:40 AM (IST)ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட ஐந்து பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மனைவி பிருந்தா என்பவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் ஐந்து  பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து தங்கச்சி அம்மாபட்டி நோக்கி செல்வதற்காக தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கையில் இருந்த பை தவறுதலாக கீழே விழுந்துள்ளது. 

இந்நிலையில் சிறிது தூரம் சென்று விட்டு கையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த பிருந்தா இதுகுறித்து உடனடியாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். புகார் அளிக்க வந்த ஒரு சில நிமிடத்திற்குள் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 60 வயதான முதியவர் ஆறுமுகம் என்பவர் பிருந்தா தவறவிட்ட நகையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

இந்நிலையில் காணாமல் போன நகை ஒரு சில நிமிடத்திற்குள் ஆட்டோ ஓட்டுநரால் திரும்ப கிடைக்கப் பெற்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பெரும் நெகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. மேலும் நேர்மையாக செயல்பட்ட ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முருகேசன் பொன்னாடை போர்த்தி அன்பளிப்பு வழங்கி அவரை கௌரவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory