» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் வன்முறைத் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!
வெள்ளி 26, மே 2023 4:24:12 PM (IST)
"கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. வருமான வரித் துறையினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக காவல் துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, உடனடியாக காவல் துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
வருமான வரித் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித் துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 3, ஜூன் 2023 11:16:24 AM (IST)

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
சனி 3, ஜூன் 2023 10:14:14 AM (IST)

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)
