» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? தேதி நாளை அறிவிப்பு!!

வெள்ளி 26, மே 2023 10:28:58 AM (IST)

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் நேற்று கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா். 

இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் அவர் "பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory