» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி ஆசிரியை திடீர் மரணம்
சனி 1, ஏப்ரல் 2023 10:45:27 AM (IST)
நெல்லையில் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி ஆசிரியை திடீரென்று இறந்தார். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாதா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பத்மபிரியா (32). தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு, நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பத்மபிரியா திடீரென்று இறந்து விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பத்மபிரியா உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கதறி அழுதனர். இதை அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேசுவரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பத்மபிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், "டயாலிசிஸ் சிகிச்சைக்கு முன்பு வரை பத்மபிரியா, குடும்பத்தாரிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் டயாலிசிஸ் சிகிச்சை சரியாக அளிக்கப்படாமல், டாக்டர் மற்றும் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் அவர் இறந்து விட்டார்" என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனைக்குள் சென்று டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு!
சனி 3, ஜூன் 2023 3:27:51 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 3, ஜூன் 2023 11:16:24 AM (IST)

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
சனி 3, ஜூன் 2023 10:14:14 AM (IST)
