» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிதியுதவி : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்
வெள்ளி 24, மார்ச் 2023 11:27:19 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து மறைந்த வேல்முருகன் மனைவி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிதியுதவி வழங்க கோரி மனு அளித்தார். அதனடிப்படையில், குமரி மாவட்ட பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் மறைந்த பத்திரிக்கையாளர் வேல்முருகனின் மனைவி ஆர்.பொன்னம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே.திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஜா.லெனின் பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










