» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதான பாதிரியார் பாளை. சிறைக்கு மாற்றம்

வெள்ளி 24, மார்ச் 2023 10:39:27 AM (IST)

ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் பெனடிக்ட் ஆன்றோ (29). கொல்லங்கோடு அருகே உள்ள சூழால்குடயால் விளை பகுதியைச் சேர்ந்த இவர், பாதிரியாராக பணியாற்றி வந்த நிலையில் தான் ஆபாச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஆபாச சாட்டிங், வீடியோ, போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் பதுங்கி இருந்த பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டனர். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, திடீரென நாகர்கோவில் சிறையில் இருந்து, பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பெண்கள் புகார் அளித்த நிலையில், அதில் விசாரணைக்கு வரவேண்டிய இளம்பெண் ஒருவர், போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பிடித்து வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்கள் யாரிடமாவது இருந்தால், 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory