» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல மருத்துவமனை நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

வெள்ளி 24, மார்ச் 2023 8:11:25 AM (IST)

பிரபல மருத்துவமனை மருத்துவ சிகிச்சைக்கு அதிகமான கட்டணம் வசூலித்ததால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.25,000 நஷ்டஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையைச் சார்ந்த சரசா .என்பவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஹார்ட் கேர் சென்டரில் காய்ச்சல் மற்றும் இருமலுக்காக சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதற்காக ரூ.65,000 செலுத்தியுள்ளார். அதன் பின்னர் சிகிச்சைக்கான விபரங்கள் குறித்த தகவலை கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை. மேலும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் உணர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் மருத்துவமனையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.25,000, ஏற்கனவே சிகிச்சைக்காக அதிகமாக செலவழிக்கப்பட்ட ரூ.16,800, மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.46,800 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனஉத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory