» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரிட்டிஷ் தீவிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி.

வெள்ளி 24, மார்ச் 2023 8:06:30 AM (IST)



பிரிட்டிஷ் தீவிலிருந்து விடுவிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சார்ந்த ரெஜின் என்பவருக்கு சொந்தமான செயின்ட் மேரீஸ் என்ற விசைப்படகில் பிப்ரவரி 9-ம் தேதி தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து  தூத்தூர், மார்த்தாண்டன்துறை, திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம், புதியதுறை, கொல்கொத்தா மற்றும் ஜார்கண்ட்  பகுதிகளை சார்ந்த 16 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது கடல் எல்லை தாண்டியதாக பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலிலுள்ள டீகோ கார்சியா தீவிலுள்ள அதிகாரிகளால் பெப்ரவரி 23-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 

இவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜஸ்டின் ஆன்டணி அவர்கள் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை, காவல்துறை மூலம் மேற்கொண்ட பலகட்ட முயற்சிகளின் பயனாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ. 2 லட்சமாக குறைக்கப்பட்டு, தேங்காய்பட்டணம் துறைமுகத்துக்கு வந்துசேர்நதனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஜஸ்டின் ஆன்டணி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory