» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை வீட்டில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 32 பவுன் நகை கொள்ளை!
வியாழன் 23, மார்ச் 2023 4:44:49 PM (IST)
பணகுடி அருகே ஆசிரியை வீட்டிற்குள் நுழைந்து அரிவாளைக் காட்டி மிரட்டி 32 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் டேனியல் சேகர். இவரது மனைவி சகிலா(55). இவர்களது மகள் மேரி செல்சியா(23). டேனியல் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சகிலா வடக்கன் குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதியில் தனது மகளுடன் சகிலா வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலையில் சகிலாவும், செல்சியாவும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். உடனே சகிலாவும், அவரது மகளும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் ரத்தம் சொட்ட சொட்ட கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி 2 பேரையும் மிரட்டினர்.
பின்னர் அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். உடனே சகிலா பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரிவாளில் இருந்து விழுந்த ரத்தத்தை சோதனை செய்தபோது கோழியின் ரத்தம் என்பதும், வீட்டில் இருப்பவர்களை மிரட்டுவதற்காக அதனை அரிவாளில் தடவி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











ஆண்டMar 25, 2023 - 05:54:13 PM | Posted IP 162.1*****