» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 22, மார்ச் 2023 3:30:49 PM (IST)
தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 22 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பொன்னாகரம் (தருமபுரி) 9, திருமங்கலம் 7, மீமிசல் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு; துரை வைகோ முதன்மைச் செயலர்
சனி 3, ஜூன் 2023 5:00:14 PM (IST)

ஒடிசா ரயில் விபத்து திட்டமிட்டச் சதியா? கவனக்குறைவா? சீமான் கேள்வி!
சனி 3, ஜூன் 2023 4:44:11 PM (IST)

வீடு புகுந்து தாய், மகளிடம் நகை பறிப்பு: கத்திமுனையில் மர்ம நபர் கைவரிசை
சனி 3, ஜூன் 2023 4:24:18 PM (IST)

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு!
சனி 3, ஜூன் 2023 3:27:51 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)
