» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம்: ஜெயக்குமார் விமர்சனம்

ஞாயிறு 19, மார்ச் 2023 7:52:27 PM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் யாரென்றே தெரிந்திருக்காது, ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் கேட்டது ஓ.பன்னீர்செல்வம்தான், ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகாமல் இறுதியில்தான் ஆஜரானார். கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார்

மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர்.  ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சி நலனுக்காக ஓபிஎஸ் எப்போது பேசியிருக்கிறார்?. அதிமுக நலனுக்காக ஓ.பன்னீர்செல்வம் பேசியதோ, செயல்பட்டதோ இல்லை. நிதானத்தை இழந்து விரக்தியில் கட்சிக்கு எதிராக ஓபிஎஸ் பேசி வருகிறார்.  பிக்பாக்கெட் என்று ஓபிஎஸ் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித் துறையை பறித்துக்கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான் எனக் குறிப்பிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory